மேல்மலையனூர் உண்டியலில் ரூ. 29.5 லட்சம் காணிக்கை!
ADDED :4820 days ago
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் உண்டியலில் 29 லட்சத்து 46 ஆயிரம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது.இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் மேல்மலையனூர் எம். ஜோதி, கடலூர் சி. ஜோதி ஆகியோர் முன்னிலையில் இப்பணிகள் நடந்தன. இதில் 29 லட்சத்து 46 ஆயிரத்து 223 ரூபாய் ரொக்கமும், 214 கிராம் தங்க நகைகள், 101 கிராம் வெள்ளி நகைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கோவில் மேலாளர் முனியப்பன், ஆய்வாளர் முருகேசன், அறங்காவலர் குழு தலைவர் சின்னத்தம்பி, அறங்காவலர்கள் ஏழுமலை, பெருமாள், காசி, சரவணன், வடிவேல், சேகர் உடன் இருந்தனர். வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.