நடராஜருக்கு ஆறுமுறை அபிஷேகம்
ADDED :965 days ago
கடவுள் உயிர்களுக்காக ஐந்தொழில்களை செய்கிறார்.இதனைக் குறிக்கும் வகையில் சிவன் கோயில்களில் ஆண்டுக்கு ஆறுமுறை நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும். இதை சபாபதி அபிஷேகம் என்பர். அபிஷேக மண்டபத்திற்கு எழுந்தருளல் – படைத்தல்.
அவரது கரத்தில் காப்பு கட்டுதல் – காத்தல்.
திருச்சாந்து சாத்துதல் – அழித்தல்.
பச்சை கற்பூரம் சாத்தல் – மறைத்தல்.
பக்தர்களுக்கு தரிசனம் தருதல் – அருளல்.