செல்வாக்கு மிக்க உயர் பதவியும், நல்வாழ்வும் வேண்டுமா?
ADDED :1011 days ago
இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த சித்திரபானு, முற்பிறவியில் வேடனாக இருந்தான். காட்டுக்கு வேட்டைக்குச் சென்ற இடத்தில் அங்கேயே தங்கி விட்டான். ஒரு வில்வ மரத்தின் மீதேறி அமர்ந்தான். சாப்பிடாமல் இருந்ததால் தூக்கம் வரவில்லை. கண் விழித்தபடி, வில்வ இலைகளைப் பறித்து கீழே போட்டான். அவை கீழிருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. ஒரு சிவராத்திரி நாளில் இந்த சம்பவம் நடந்தது. அறியாமல் செய்த இச்செயல், வழிபாடாகி புண்ணியத்தைக் கொடுத்தது. அதனால், சித்திரபானு தன் மனைவியுடன் சிவராத்திரிநாளில் விரதம் மேற்கொண்டு வந்ததாக மகாபாரதம் சாந்திபர்வம் கூறுகிறது. சிவனை பூஜித்தால், செல்வாக்கு மிக்க உயர் பதவியும், நல்வாழ்வும் கிடைக்கும் என்பதை பீஷ்மர் பாண்டவர்களுக்கு உபதேசித்துள்ளார்.