உப்பூர் விநாயகருக்கு செப்.17ல் திருக்கல்யாணம்
ADDED :4872 days ago
ஆர்.எஸ்.மங்கலம் : ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு செப்.,17ல், சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் நடக்கிறது. தென்னிந்தியாவிலேயே சித்தி, புத்தியுடன் உப்பூரில் அருள்பாலித்து வருபவர் வெயிலுகந்த விநாயகர். இக்கோயிலில் சதுர்த்தி விழா, இன்று காலை 9.40க்கு, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வருகிறார். 10 நாள் விழாவில், தினமும் சிம்ம, மயில், யானை, ரிஷிப, காமதேனு ஆகிய வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. செப்.,17ல் சித்தி, புத்தியுடன், விநாயகருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. செப்.,18ல், தேரோட்டமும், அடுத்த நாள் கடற்கரையில் தீர்த்தவாரி முடிந்த பின் விநாயகர் கோயில் வந்தடைகிறார். பின்னர் கோயில் முன், ஏராளமான பக்தர்கள், பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.