அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி : நாள் முழுவதும் இன்னிசை நிகழ்ச்சி
ADDED :1066 days ago
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன், உலக நன்மைக்காக மகா சிவராத்திரி நாள் முழுவதும், மாவட்ட கிரிவலம் நாதஸ்வரம் மற்றும் தவில் இசை சங்கம் சார்பில், இன்னிசை நிகழ்ச்சி நடத்தினர். மகா சிவராத்திரியை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் லிங்கோற்பவர் சன்னதி முன் வண்ண வண்ண தோரணங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அருணாசலேஸ்வரர் கோவில், மூலவர் சன்னதியில் நடந்த லட்ச அர்ச்சனைக்காக, கோவில் வளாகத்தில் ஏராளமான வில்வம் மற்றும் பூக்கள் குவிக்கப்பட்டுள்ளது.