காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்
ADDED :1069 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் இன்று வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாவது நாள் "மகா சிவராத்திரி" விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இதனை யொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர் .இதற்காக கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்ததோடு காலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தனர் மேலும் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோவில் வளாகத்தில் கூடுதலாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பிரசாத மையங்களில் பிரசாதங்கள் வழங்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.