வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் 2ம் நாள் தேரோட்ட விழா
ADDED :957 days ago
திருப்பூர்: வெள்ளகோவிலில் உள்ள வீரக்குமாரசாமி கோவில் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. நேற்று, இரண்டாம் நாளாக தேரோ ட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் முத்துக்குமார், முன்னாள் அறங்காவலர்கள் சுந்தரவடிவேல், பிரியா, குணசேகர், குமாரசாமி உட்பட பலர் பங்கேற்றனர். இன்று தேர் நிலையை சேர்கிறது. இதேபோல், சின்ன முத்துாரிலுள்ள செல்வக்குமாரசுவாமி கோவிலிலும் தேரோட்டம் நடைபெற்று வருகிறது.