சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி
ADDED :964 days ago
விக்கிரமசிங்கபுரம்: காரையார் காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வழக்கம் போல் பக்தர்கள் இன்று (22ம்தேதி) முதல் அனுமதிக்கப்படுகின்றனர்.
முண்டந்துறை வனச்சரகத்தில்புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 8 ம்தேதி துவங்கி நேற்று (21ம்தேதி) வரை நடந்தது. இதனால் காரையார் மற்றும் சேர்வலாறு பகுதிகளுக்குள் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். இந்நிலையில் கணக்கெடுக்கும் பணி நேற்றுடன் முடிவடைந்து விட்டதால் காரையார் காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு இன்று (22ம்தேதி) முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அகஸ்தியர் அருவியில் தடுப்பு சுவர் மற்றும் மராமத்து பணி நடந்து வருவதால் அருவிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல வனத்துறையினர் விதித்த தடை நீடிக்கிறது.