வைத்தியநாதபுரத்தில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED :961 days ago
சோழவந்தான்: சோழவந்தான் அருகே வைத்தியநாதபுரத்தில் மகா சிவராத்திரி திருவிழா நடைபெறுகிறது. இதில் ஒன்பதாம் நாள் திருவிழாவான நேற்று இரவு முளைப்பாரியும் ஒயிலாட்டமும் நான்கு வீதிகளில் வலம் வந்து இருப்பிடம் சேர்ந்தது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முளைப்பாரி எடுத்தனர். காட்டு நாயக்கர் சமூகத்தினர் ஏற்பாட்டினைச் செய்திருந்தனர்.