உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனுார் அங்காளம்மன் திருத்தேர் உற்சவம் : குவியும் பக்தர்கள்

மேல்மலையனுார் அங்காளம்மன் திருத்தேர் உற்சவம் : குவியும் பக்தர்கள்

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இன்ன திருத்தேர் உற்சவம் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க பல்வேறு ஊர்களில் இருந்தும் நடைபயணமாகவும், வாகனங்களிலும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி பெருவிழா கடந்த 18ம் தேதி மகாசிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது. 5ம் நாள் விழாவாக 22 ம் தேதி தீமிதி விழா நடந்தது. இன்று (24ம் தேதி) முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு இன்று அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், பூஜைகளும் நடக்க உள்ளது. பகல் 1.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் பங்கு கொள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் ஏராளமான பக்தர்கள் நடை பயணமாகவும், வாகனங்களிலும் குவிந்து வருகின்றனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சந்தானம், அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், சரவணன், வடிவேல் மற்றும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். சென்னை, கடலூர், புதுச்சேரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உட்பட பல்வேறு ஊர்களில் நேற்று முதல் சிறப்பு பஸ்களை இயக்கி வருகின்றனர்.

விடுமுறை: இந்த திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் தமிழக அரசு அலுவலகங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !