உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னபக்ஷி வாகனத்தில் காரமடை அரங்கநாத சுவாமி உலா

அன்னபக்ஷி வாகனத்தில் காரமடை அரங்கநாத சுவாமி உலா

காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் மாசிமக தேர் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் அன்னபக்ஷி வாகனத்தில் வலம் வந்தார்.

காரமடை அரங்கநாதர் கோவில் தேர் திருவிழா 28 ம்தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் பெருமாள் தினமும் வெவ்வேறு வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவில் இன்று ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் அன்னபக்ஷி வாகனத்தில் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வருகிற, 5ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. 6ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !