சின்னாளபட்டியில் கோயில் திருவிழா
ADDED :1052 days ago
சின்னாளபட்டி: சின்னாளபட்டி அண்ணா மார்க்கெட் வளாகத்தில், சக்தி மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. முன்னதாக பிருந்தாவன தோப்பில் இருந்து அம்மன் கரக அழைப்பு நடந்தது. அம்மன் ஊர்வலத்தை தொடர்ந்து, திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.