வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசி திருவிழா தேரோட்டம்
ADDED :1053 days ago
நாகர்கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசி திருவிழாவில் இன்று தேரோட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களின் ஒன்றான வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் மாசி திருவிழா கடந்த பிப்., 25–ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்பதாம் நாள் விழாவான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. சிறிய தேரில் விநாயகரும், பெரிய தேரில் சுவாமி– அம்பாள் எழுந்தருளினர். காலை 8:00 மணிக்கு பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். பத்தாம் நாள் விழாவான இன்று ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.