உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் சர்ப்ப தோஷ நிவாரணை பூஜை : குவிந்த பக்தர்கள்

காளஹஸ்தி சிவன் கோயிலில் சர்ப்ப தோஷ நிவாரணை பூஜை : குவிந்த பக்தர்கள்

காளஹஸ்தி: திருப்பதி,  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமாக சிறந்து விளங்குவதால் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர் . மேலும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வார இறுதி நாள் என்பதால் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் நடத்தப்படும் சிறப்பு மிக்க  ராகு கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் ஈடுபட ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்ததால் நின்று நீண்ட வரிசையில் காத்திருந்து ராகு கேது சர்ப்ப தோஷ நிவாரணையில் பூஜையில் ஈடுபட்டதோடு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் வரிசைகளில் தள்ளுமுள்ளு ஏற்படாமலும் கோயில்  நிர்வாக அதிகாரி சாகர் பாபு தலைமையில் அதிகாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !