செஞ்சி கோதண்டராமர் கோவிலில் மாசிமக விழா: 9 கோவில் உற்சவர்கள் தீர்த்தவாரி
செஞ்சி: செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் நேற்று நடந்த மாசி மகதீர்த்தவாரியில் 9 கோவில்களில் இருந்து உற்சவர்கள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் நேற்று மாசிமக தீர்த்வாரி நடந்தது. சிங்வரம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதர், கோதண்டராமர் கோவில் சீதாதேவி, ராமர், லட்சுமணர், செஞ்சிக்கோட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணர், செஞ்சி காமாட்சியம்மன் உடனுரை ஏகாம்பரேஸ்வரர், திருவத்திமலை வெங்கடேச பெருமாள் கோவில் வெங்கடேச பெருமாள், சோழங்குணம் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனுவாச பெருமாள், நெகனுார் பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள், செஞ்சி பெரியகரம் முத்துமாரியம்மன், இல்லோடு ஏலவார் குழலி சமேத ஏகாம்பரேஸ்வரர், உற்சவர்கள் எழுந்தருளி சங்கராபரணி ஆற்றில் தீர்த்த வாரி நடந்தது. தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சங்கராபரணி ஆற்றில் நீராடினர். பக்தர்களுக்கு அனைத்து கோவில்கள் சார்பிலும் அன்னதானம் வழங்கினர்.