ஆற்றுகால் பகவதி அம்மன் பொங்கல் விழா : 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வழிபாடு
கேரளா மாநிலத்தில் பிரசித்திபெற்ற திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட
பெண்கள் பங்கேற்று பொங்கலிட்டு வழிபட்டனர்.
கேரளா மாநிலத்தில் பிரசித்த பெற்ற ஆலயங்களுள் மிகமுக்கியமானது திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் திருக்கோவில் மதுரையை எரித்த கண்ணகி குழந்தையாக கிள்ளியாற்றின் கரையில் அவதரித்தநாளான மாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில் பௌர்ணமி நாள் ஆற்றுகால் பொங்காலை திருவிழா நடைபெறுகிறது. மதுரையை எரித்த கோபத்திலிருந்த கண்ணகியை பெண்கள் பொங்கலிட்டு அமைதிபடுத்தி வழிபட்டனர் என்பது வரலாறு அதன் காரணமாக ஆண்டுதோறும் பலலட்சகணக்கான பெண்கள் விரதமிருந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனாஊரடங்கு காரணமாக பொது இடங்களில் பொங்கல் விழா நடைபெறவில்லை. இதையடுத்து இந்த ஆண்டு ஆற்றுகால் பொங்கல் விழா கடந்த மாதம் 27ம் தேதி காப்புகட்டி துவங்கியது. தொடர்ந்து இன்று பொங்கலிட்டு வழிபட்டனர். முன்னதாக ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் முன்பாக அமைக்கபட்டிருந்த பண்டார அடுப்பில் ஆலய மேல்சாந்தி ஈஸ்வரன் தம்பூதிரி தீமூட்டினார். இந்நிகழ்ச்சியில் கேரளா அமைச்சர்கள் அனில், சிவன்குட்டி , ஆன்றனி ராஜூ மற்றும் எம்பிகள் முரளீதரன், சசீதரூர்,ரஹீம் பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன்,முன்னாள் அமைச்சர் சிவகுமார் ,கேரளா காவல்துறை டிஜிபி அனில் காந்த்,உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருவனந்தபுரம் மாநகர பகுதிகளான தம்பானூர், மணக்காடு, கிழக்கேகோட்டா ,அம்பலதற, பாளையம் வெள்ளையம்பலம், சாக்கை ஈஞ்சக்கல் உட்பட நகரின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் பெண்கள் திரளாக குவிந்து சாலைகளிலும் வீட்டு வளாகங்களிலும் பொங்கலிட்டு வழிபட்டனர். சுமார் 25லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பொங்கலிட்டது குறிப்பிடதக்கது.