ஸ்ரீவி. வைத்தியநாத சுவாமி கோயிலில் மாசி மகத் திருவிழா
ADDED :1013 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் மாசி மகத் திருவிழா சிறப்புடன் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை 7:00 மணிக்கு முருகன், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு ஹோமம் வளர்த்து, ஜெபம் செய்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்களை ரகு பட்டர் செய்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜவகர், கோயில் பட்டர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர். இதேபோல் வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் மாசி மகத் திருவிழா விமர்சையாக நடந்தது. இங்குள்ள சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு 18 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி மற்றும் அம்மனை பக்தர்கள் பஜனை செய்து வழிபட்டனர்.