176 வது தியாகபிரும்ம ஆராதனை விழா
ADDED :1037 days ago
தேவகோட்டை: தியாகபிரும்ம ஆராதன டிரஸ்ட் சார்பில் 176 வது தியாகபிரும்ம ஆராதனை விழா சங்கரர் கோவிலில் துவங்கியது. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சத்குரு தியாகராஜர் ஆகியோர் உருவப்படங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்ல ப்பட்டது. துவக்க விழா டாக்டர் பெரியசாமி தலைமையில் நடந்தது. இணை செயலாளர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். துணை செயலாளர் ராமசாமி அறிக்கை வாசித்தார். டாக்டர் சிவதாணு துவக்கி வைத்தார். விழாவில் ஜமீன்தார் சோமநாராயணன், கல்லூரி தலைவர் லட்சுமணன், கல்லூரி முன்னாள் முதல்வர் அருணாச்சலம், நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், துணை தலைவர் ரமேஷ் வாழ்த்தினர். செயலாளர் ராமசாமி துரை நன்றி கூறினார். தொடர்ந்து இசை கச்சேரிகள் நடந்தன. ஐந்து தினங்கள் பாட்டு , பஞ்ச ரத்தின கீர்த்தனைகள் நடக்கின்றன.