திருப்பரங்குன்றத்தில் பஞ்சமி விளக்கு பூஜை விழா
ADDED :943 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அஷ்டவராஹி அறக்கட்டளை சார்பில் மகளிர் தின விழா, சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு விழா, பஞ்சமி விளக்கு பூஜை விழா நடந்தது. வேலூர் ஜெய் வராஹி பீடம் சுவாமி பள்ளூர் வாராகிதாசன் தலைமை வகித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை செய்தனர். திருப்பரங்குன்றம் கோட்டை வராஹி அம்மன் வழிபாடு மன்ற நிர்வாகிகள் விழா ஏற்பாடுகள் செய்தனர்.