பழநியில் பக்தர்கள் கூட்டம்
ADDED :1081 days ago
பழநி: பழநி மலைக்கோவிலுக்கு விடுமுறை நாளை முன்னிட்டு உள்ளூர், வெளியூர் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பழநி கோயிலுக்கு விடுமுறை நாளை முன்னிட்டு வெளியூர், வெளி மாநில பக்தர்கள் அதிகம் வருகை புரிந்தனர். மலைக்கோயில் செல்ல, வின்ச், ரோப் கார், தரிசன வரிசையிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. தரிசன வரிசையில் பக்தர்கள் இரண்டு மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பழநி மலை அடிவாரம் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி இருந்தனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலை நேரத்தில் போதிய பஸ் வசதி இல்லாமல், பஸ் ஸ்டாண்டில் வெளியூர் பக்தர்கள் காத்திருந்தனர்.