உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யானை வாகனத்தில் திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் உலா

யானை வாகனத்தில் திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் உலா

திருச்சி: திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் யானை வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


திருச்சிக்கு அருகில் துறையூர் போகும் வழியில் அமைந்துள்ளது 108 வைணவத் திவ்ய தேசங்களில் நான்கவது திவ்ய தேசமுமான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில்.இக்கோயிலில் மார்ச்10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ‘பிரம்மோத்ஸவ உற்சவ திருவிழாவில் உற்சவ மூர்த்தி காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வகையான வாஹனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை 13ம் தேதி நடைபெற்றது. பிரம்மோத்சவத்தின்  6ம் நாளான நேற்று யானை வாகனத்தில் புண்டரீகாட்ச பெருமாள் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !