உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எட்டுக்குடி முருகன் கோவில் தெப்போற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

எட்டுக்குடி முருகன் கோவில் தெப்போற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பின் நடந்த தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.நாகை மாவட்டம் எட்டுக்குடியில் முருகப்பெருமானின் ஆறுபடை வீட்டிற்கும் ஆதி படைவீடாய் அமைந்துள்ளது மிக பழமையான சுப்பிரமணிய சுவாமி கோவில். இக்கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி  கடந்த ஜன.,27 ம் தேதி நடந்தது.நேற்று முன்தினம் இரவு கும்பாபிஷேக மண்டலாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு,40 ஆண்டுகளுக்கு பின் தெப்ப உற்சவம் நடைபெற்றது. மின்விளக்குகளால்  அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சிங்காரவேலவர் தேவியருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார் மங்கள வாத்தியங்கள் முழங்க தீர்த்த குளத்தில் தெப்பத்தில் 3 முறை சிங்காரவேலவர் வலம்  வந்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !