உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஸ்தானம் அடைந்தார் காரமடை அரங்கநாதர்

ஆஸ்தானம் அடைந்தார் காரமடை அரங்கநாதர்

மேட்டுப்பாளையம்: காரமடையில் மாசி மகத் தேர்த்திருவிழா முடிவடைந்ததை அடுத்து, அரங்கநாத பெருமாள், தம்பதியர் சமேதராக ஆஸ்தானம் அடைந்தார்.

கோவை மாவட்டம், காரமடை அரங்கநாதர் கோவிலில், மாசி மகத் தேர்த்திருவிழா, கடந்த மாதம், 28ம் தேதி துவங்கி, இம்மாதம் பத்தாம் தேதி வரை நடந்தது. திருக்கல்யாண வைபவம், தேரோட்டம், தண்ணீர் சேவை, தீ பந்த சேவை ஆகிய வைபவங்களில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று கிருஷ்ண பக்ஷ ஏகாதசியான சனிக்கிழமை அதிகாலையில், மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், கால சந்தி பூஜை, விஸ்வக்சேனர், ஆவாகனம், புண்ணியா வசனம், கலச ஆவாகனம் ஆகிய பூஜைகள் நடந்தன. பின்பு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. வெள்ளி சிம்மாசனத்தில் மேள வாத்தியங்கள் முழங்க, கோவிலில் வலம் வந்து, தம்பதியர் சமேதராக ஆஸ்தானம் சேர்ந்தார். அங்கு உச்சிக்கால பூஜை, சற்று முறை சேவித்து, மகா ஆரத்தியுடன், வைபவம் பூர்த்தியானது. இந்த வைபவத்தில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள், அதிகாரிகள் பக்தர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !