காரமடை அரங்கநாதர் கோவிலில் யுகாதி வைபவம்: மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம்
ADDED :1153 days ago
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
வைணவ திருத்தலங்களில் காரமடை ரங்கநாதர் திருக்கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு யுகாதி பண்டிகை முன்னிட்டு நேற்று காலையில் மூலவர் ரங்கநாதருக்கு நெய் பால் தயிர் இளநீர் மஞ்சள் பன்னீர் சந்தனம் உள்ளிட்டவைகளால் திருமஞ்சனம் செய்திக்கப்பட்டது. அப்போது ஸ்தல தார்கள்,அச்சகர்கள் பஞ்ச சுக்தம் வேத கோஷம், திவ்ய பிரபந்த நீராட்டு பாசுரங்கள் சேவித்தனர். அதனைத் தொடர்ந்து கால சந்தி பூஜை உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு ஆராதனம் சாற்று முறை சேவிக்கப்பட்டது. மாலையில் திருவீதி புறப்பாடு நடந்தது.