உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரைலோக்கியநாதர் கோவில் கோபுரத்தில் செடிகள் சிற்பங்கள் சேதமாகும் அபாயம்

திரைலோக்கியநாதர் கோவில் கோபுரத்தில் செடிகள் சிற்பங்கள் சேதமாகும் அபாயம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் திருப்பருத்திக்குன்றத்தில், சமணர் தலமான திரைலோக்கியநாதர் ஜீனசுவாமி கோவில் உள்ளது. 700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோவில் தமிழ்நாடு தொல்லியல் துறையின்  கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. பல்வேறு சிறப்புக்களை பெற்ற இக்கோவில் ராஜகோபுரத்தில் செடிகள் வளர்ந்து வருகின்றன. இச்செடிகளின் வேர்களால் கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சேதமாகி,  கோபுரத்தின் உறுதித்தன்மையும் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. கோவில் ராஜகோபுரத்தில் வளர்ந்து வரும் செடிகளை வேருடன் அழிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !