ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை!
ADDED :4874 days ago
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் உள்ள அபிஷ்ட வரதராஜ பெருமாள் ஆஞ்சநேயர் கோவிலில், மழைவேண்டி சிறப்பு யாகபூஜை நடந்தது. இதில், 81 கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டது. பின்னர் ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கலச அலங்காரத்துடன் அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளான பக்தர்கள் பங்கேற்று, ஆஞ்சநேயரை வழிபட்டனர்.