சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா நிறைவு
ADDED :1025 days ago
அவிநாசி: அவிநாசி கிழக்கு வீதியில் எழுந்தருளியுள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா நிறைவு நாளில், மஞ்சள் நீராடுதல், அம்மன் திருவீதி உலா வருதல், மறுபூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சமயபுரம் மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.