உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் திருப்பணி வேலைகள் துவக்கம்

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் திருப்பணி வேலைகள் துவக்கம்

அவிநாசி: அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு திருப்பணிகளுக்கான துவக்க விழா,நடைபெற்றது.

தமிழகத்தின் புகழ்பெற்ற மூன்றாவது பெரிய தேரும்,சுந்தரமூர்த்தி நாயனாரால்,பாடல் பெற்ற தலமாகவும்,கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இத்திருத்தலத்தில்,கும்பாபிஷேகம் நடைபெற்று 14 வருடங்கள் ஆகிறது. தற்போது கும்பாபிஷேக திருப்பணிகளில் ஆரம்ப கால மராமத்து பணிகள் நடைபெற துவங்கியுள்ளது. முன்னதாக அரசமரத்து விநாயகருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பாலாலயமும்,தாமரை குளக்கரையில் அமைந்துள்ள சுந்தரமூர்த்தி நாயனார் கோவிலில் திருப்பணிகளுக்கான பாலாலய பூஜைகளும் நடைபெற்றது. மேலும், கடந்த 13ம் தேதி ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் சந்ததியின் முன் உள்ள ஐந்து நிலை ராஜகோபுரத்திற்கு கோவை ராமானந்தா அடிகளார் அறக்கட்டளையின் சார்பில் ரூ.11 லட்சத்தில் திருப்பணி செய்வதற்கான பாலாலய பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோவிலின் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்துவதற்கு ஹிந்து சமய அறநிலையத்துறையின் சார்பில்,திருப்பணி வேலைகள் துவக்க விழா நடைபெற்றது. இதில்,கௌமார மடாலயம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள்,பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார்,செஞ்சேரிமலை ஸ்ரீ முத்துக்குமார சுவாமிகள், திருப்புக்கொழியூர் வாகீசர் மடாலயம் காமாட்சி தாச சுவாமிகள்,இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர் செந்தில்குமார், கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன்,அவிநாசி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, உபயதாரர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !