உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி சங்கரமடத்தில் வசந்த நவராத்திரி பூஜை

காஞ்சி சங்கரமடத்தில் வசந்த நவராத்திரி பூஜை

திருநெல்வேலி: நெல்லை டவுன் காஞ்சி சங்கர மடத்தில் வசந்த நவராத்திரி விழா 3வது நாளில் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நெல்லை டவுன் காஞ்சி சங்கரமடத்தில் வசந்த நவராத்திரி விழா 22ம்தேதி துவங்கியது. 3ம்நாளில் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஆடிட்டர் சுந்தர்ராமன், கயிலைகண்ணன், சங்கர்நகர் ராஜம்மாமி, தீபா சீதாராமன் கலந்து கொண்டனர். சுவாசினி பூஜையைசீதாராமன் வாத்தியார் நடத்தினார். அம்பாளுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !