உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வனசங்கரி அம்மன் கோயிலில் மண்டல பூஜை விழா

வனசங்கரி அம்மன் கோயிலில் மண்டல பூஜை விழா

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்ட வனசங்கரி அம்மன் கோயிலில் பிப்.3ல் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜைகள் நடந்தது. நேற்று நிறைவு நாளை முன்னிட்டு அம்மனுக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து சந்தன காப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !