வடமதுரை காளியம்மனுக்கு சீர் வழங்கிய சவுந்தரராஜப் பெருமாள்
                              ADDED :949 days ago 
                            
                          
                           வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திருவிழாவில சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மூன்றாண்டுகளுக்கு ஒரு முறையில் நடக்கும் காளியம்மன் கோயில் திருவிழா கடந்த மார்ச் 17ல் அம்மன் சாட்டுதலுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் இரவு மங்கம்மாள் கேணி விநாயகர் கோயிலில் காளியம்மன், பகவதியம்மன், காளியம்மன், மாரியம்மன் கரகம் பாலித்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் கோயில் வந்தடைந்தது. நேற்று மாலை வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் தங்கைக்கு சீர் வழங்கும் நிகழ்விற்காக கருட வாகனத்தில் தேர் வீதிகள் வழியே ஊர்வலமாக வந்து காளியம்மன் கோயிலுக்கு சென்றார். பின்னர் சீர் வழங்கும் நிகழ்வு முடிந்ததும் பெருமாள் சன்னதி திரும்பினார்.