முத்துமாரியம்மன் கோயில் திருவிழா
ADDED :926 days ago
கொடைக்கானல், கொடைக்கானல் சீனிவாசபுரம் முத்து மாரியம்மன் கோயில் திருவிழா மூன்று நாள் நடந்தது. விழாவில் சப்பரம் இழுத்தல், சக்தி கரகம் எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல் நடந்தது. அம்மன் அலங்காரத்தில் வேடமிட்ட பெண்கள் நகர் பகுதியில் நடனமாடி வளம் வந்தனர். ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.