உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி பட்டாபிராம சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

காளஹஸ்தி பட்டாபிராம சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயில் துணைக்கோயில் ஆன ஸ்ரீ பட்டாபிராம சுவாமி கோவிலில் ஸ்ரீ ராம  நவமி பண்டிகையை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடத்தப்பட்டது.  முன்னதாக  ஸ்ரீ சீதாராம உற்சவமூர்த்திகளை மக்கள் வாத்தியங்கள் மேள தாளங்களுடன் திருக்கல்யாண மேடைக்கு அழைத்து(கொண்டு) வரப்பட்டு சிவன் கோயில் வேத பண்டிதர்கள் தலைமையில் கோயில் அர்ச்சகர்கள் கல்யாணோத்ஸவ பூஜைகளை நடத்தினர்.  பகல் 12 மணிக்கு அபிஜித் லக்னத்தில் ஸ்ரீ சீதாராமர் திருக்கல்யாணத்தை நடத்தப்பட்டது  திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் கோவிந்த நாமங்களை முழங்கி ஆன்மிக மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.  வேத மந்திரங்கள் முழங்க  சுவாமி அம்மையார் மீது முத்துகளை  பொழிந்தும் பூ மாலைகளை மாற்றியதில் ஆன்மிக மகிழ்ச்சியில் பக்தர்கள் மகிழ்ந்தனர்.  நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீ சீதாராமரின் திருக்கல்யாண உற்சவத்தில்  முதல்முறையாக ஈடுபட்டு சாமியை  தரிசித்து பக்தி பரவசம் அடைந்தனர். முதன்முறையாக நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் திருமண மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டு திருக்கல்யாணம் கண்கொள்ளாக் காட்சியாக நடைபெற்றது என ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. சீனிவாசலு தெரிவித்தார்.  இனி வரும் நாட்களில் ஆந்திர மாநிலம் ஒண்டிமிட்டாவில் நடத்தும் சீதா ராமர் திருக்கல்யாண உற்சவத்தைப் போல் இன்னும் சிறப்பாக நடத்த வேண்டும். என்றார். இத்திருக்கல்யாண உற்சவத்தில் அஞ்சூரு. சீனிவாசலு தம்பதிகள், தாசில்தார் சேகர் பாபு தம்பதியினர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், கோவில் நிர்வாகிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !