மதுக்கரை பட்டீசுவரர் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
ADDED :962 days ago
கோவை: மதுக்கரை குரும்பாளையம் கிராமத்தில் எழுந்தருளிய பட்டீசுவரர் கோவில் பங்குனி திங்கள் திருக்கல்யாண உற்சவ விழா இன்று நடைபெற்றது. முன்னதாக 16 வகையான திரவியங்களால் பஞ்ச மூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும் நடந்தது. பின்னர் திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது. இதில் பட்டீசுவரர், பச்சைநாயகி அம்மனுக்கு பட்டாடை மற்றும் ஆபரணங்கள் சார்த்தப்பட்டு சிறப்பு புஜைச நடைபெற்றது பின்னர் பச்சைநாயகி அம்மனுக்கு திருமாங்கல்யம் சாத்தப்பட்டது. அதன் பிறகு பட்டீசுவரர், பச்சைநாயகி அம்மனுக்கு பக்தர்கள் அனைவரும் பாதநமஸ்காரம் செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.