மயிலாப்பூர் கபாலீஸ்வரருக்கு மொய் எழுத வாங்க: இன்று திருக்கல்யாணம்
ADDED :959 days ago
சென்னை சென்னை, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி பெருவிழா கடந்த மாதம் 28ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதில், அதிகார நந்தி காட்சி, திருத்தேர் திருவீதி உலா, அறுபத்து மூன்று நாயன்மார்கள் திருவீதி உலா ஆகிய பிரதான உற்சவங்கள் நடந்து முடிந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக, இன்று இரவு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. இத்திருக்கல்யாணம் முடிந்த பின், திருமணத்திற்கான மொய் எழுத விரும்புவோர், கோவிலின் https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in வலைதளம், அறநிலையத்துறையின் https://hrce.tn.gov.in/hrcehome/index.php வலைதளம் வாயிலாக மொய் செலுத்தலாம். இவ்வாறு கோவில் இணைக் கமிஷனர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.