முத்து காளியம்மன் கோயில் மண்டல பூஜை விழா
ADDED :1022 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்தூர் அருகே திருத்தேர்வளை ஆகாச முத்து காளியம்மன் கோயில், மண்டல பூஜை விழா நடைபெற்றது. மண்டல பூஜை விழாவை முன்னிட்டு, யாகசாலை வேள்விகள் அமைக்கப்பட்டு, யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் மூலம் சுவாமிக்கு, புனித நீர் ஊற்றப்பட்டு, மண்டல அபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.