அவிநாசி பிளாக் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா தீர்த்த குட ஊர்வலம்
ADDED :1301 days ago
அவிநாசி: அவிநாசியில் எழுந்தருளியுள்ள பிளாக் மாரியம்மன் கோவிலில் 110 ஆம் ஆண்டு பூச்சாட்டு விழாவில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குட ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் .சிம்ம வாகன அலங்காரத்தில் பிளாக் மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.