ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா : சேஷ வாகனத்தில் நம்பெருமாள் உலா
ADDED :1005 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேர் திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று காலை உற்சவர் நம்பெருமாள் காலை சேஷ வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகள் வலம் வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் பட்டு நூல்காரர் ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தார். தொடர்ச்சியாக மாலை 6.00 மணியவில் அனுமந்த வாகனத்தில் புறப்பாடு கண்டருளி வீதிகள் வலம் வந்து இரவு 9.15 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைகிறார். மூலவர் சேவை காலை 7.00 - 12.30. பிற்பகல் 1.30 – 5.00 மணி மற்றும் மாலை 6.45 - இரவு 8.30 மணி வரையிலும் ஆகும். நடைபெறுகிறது.