உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தத்தில் சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

நத்தத்தில் சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

நத்தம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு அங்குள்ள நந்தீஸ்வரர் சிலைக்கு பால், இளநீர், சந்தனம், ஜவ்வாது போன்ற 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். இதைப்போலவே கோபால்பட்டி கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !