பாலமலை ரங்கநாதர் கோவில் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா : 29ம் தேதி கொடியேற்றம்
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவில் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா இம்மாதம், 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
விழாவையொட்டி, அன்ன வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனங்களில் பாலமலை ரங்கநாதர் தாயார்களுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மே மாதம், 3ம் தேதி செங்கோதை அம்மன் அழைப்பு, மறுநாள் திருக்கல்யாண உற்சவம், புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது. மே மாதம், 5ம் தேதி மாலை, 4:00 மணிக்கு யானை வாகன உற்சவம், தொடர்ந்து, சின்ன தேர் உற்சவம் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 6ம் தேதி பரிவேட்டை, குதிரை வாகன உற்சவம், 7ம் தேதி சேஷவாகன தெப்போற்சவம், 8ம் தேதி சந்தன சேவை சாற்றுமுறை நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் தலைமையில் நடந்து வருகிறது.