வடமதுரையில் பாதயாத்திரை ஆண்டு விழா
ADDED :1042 days ago
வடமதுரை: வடமதுரையில் கரகாத்தாள் புற்று மாரியம்மன் சமயபுரம் பாதயாத்திரை குழுவினரின் 39 வது ஆண்டு விழா நடந்தது. திருச்சி ரோடு மங்கம்மாள் கேணி விநாயகர் கோயிலில் இருந்து கொடுமுடி காவிரி தீர்த்தம், பால் குடங்களுடன் புறப்பட்ட ஊர்வலம் தேரோடும் வீதிகள் வழியே மாரியம்மன் கோயில் வந்தது. திருமஞ்சனம், அபிஷே கம் தொடர்ந்து வேப்பிலை கஞ்சி, அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் இரவு மின் அலங்கார ரதத்தில் அம்மன் நகர்வலம் வந்தார். ஏற்பாட்டினை பாதயாத்திரை குழுவினர் செய்திருந்தனர்.