சிங்கம்புணரி செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :1009 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் பழமையான செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏப். 24ஆம் தேதி அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி மூன்று நாட்கள் நடந்தது. இன்று காலை 10:00 மணிக்கு கோயில் விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. யாகசாலை பூஜைகளை கணேஷ்குமார் பட்டர், கோயில் அர்ச்சகர் லட்சுமணன் சிவாச்சாரியார் செய்திருந்தனர். பக்தர்களுக்கு விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை அருவியூர் வடக்கு வளவு நகரத்தார்கள் செய்திருந்தனர்.