உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாதர் கோவிலில் ராமநவமி விழா

காரமடை அரங்கநாதர் கோவிலில் ராமநவமி விழா

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் ராமநவமி விழா நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலம் அரங்கநாதர் கோவில். ராமநவமி விழாவை முன்னிட்டு, அதிகாலை மூலவருக்கு, சிறப்பு திருமஞ்சனம், கால சந்தி பூஜை செய்யப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்பு. வெண்பட்டு குடை சூழ, வெள்ளி சிம்மாசனத்தில், நான்கு ரத வீதிகள் வழியாக, உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்பு கோவிலை அடைந்ததும், அரங்கநாத பெருமாள் முன்பு, ஸ்தலத்தார் திவ்ய பிரபந்தத்தில் இருந்து பாசுரங்களை சேவித்தனர். தொடர்ந்து சற்று முறை முடிந்த பின், பானகம், நீர்மோர் ஆகியவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில் கோவில் ஸ்தலத்தார், அர்ச்சகர்கள், மிராசுதார்கள் கோவில் ஊழியர்கள் பக்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !