பழநியில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
ADDED :1017 days ago
பழநி: பழநி மலைக்கோவிலுக்கு விடுமுறை நாளை முன்னிட்டு உள்ளூர், வெளியூர் பக்தர்கள் மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்
பழநி கோயிலுக்கு சனி, ஞாயிறு, தொழிலாளர் தினம் விடுமுறை நாளை முன்னிட்டு வெளியூர், வெளி மாநில பக்தர்கள் அதிகம் வருகை புரிந்தனர். மலைக்கோயில் செல்ல, வின்ச், ரோப் கார், தரிசன வரிசையிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. இரண்டு வின்ச் மட்டும் செயல்பட்டதால் அதிக கூட்டம் நின்றது. தரிசன வரிசையில் பக்தர்கள் மூன்று மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பழநி மலை அடிவாரம் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி இருந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலி கைடுகள் பேருந்து நிலையம் சன்னதி வீதி, கிரிவீதி ஆகிய பகுதிகளில் நின்று பக்தர்களிடம் பணம் பறிக்கும் நிலை இருந்தது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.