ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வசந்த உற்சவம் : சுவாமி, அம்மன் உலா
ADDED :918 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வசந்த உற்சவம் யொட்டி சுவாமி, அம்மன் தீர்த்த குளத்தை வலம் வந்தனர்.
ராமேஸ்வரம் கோயிலில் ஆடி, மாசி விழாவில் சுவாமி அம்மன் உலா வருவர். கோடை காலமான சித்திரையில் பூக்கள் மலர்ந்து காய்கள் காய்க்கும். இந்த வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக ராமேஸ்வரம் கோயிலில் வசந்த உற்சவ விழா நடக்கும். அதன்படி கடந்த 3 நாட்களாக கோயிலில் இருந்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பிரியாவிடை அம்மன் பல்லாக்கில் எழுந்தருளி, இரவு 7:30 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள சேதுமாதவ தீர்த்த குளத்தை 3 முறை சுற்றி வலம் வந்தனர். அப்போது பக்தர்கள் சுவாமி, அம்மன் மீது மலர் தூவி சுவாமி தரிசனம் செய்தனர். இந்த வசந்த உற்சவ விழா கோயிலில் தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் என குருக்கள் தெரிவித்தனர்.