சின்னாளபட்டியில் மீனாட்சி திருக்கல்யாணம்
ADDED :1224 days ago
சின்னாளபட்டி: சின்னாளபட்டி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவில், மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது.
சின்னாளபட்டி மேட்டுப்பட்டி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா ஏப். 19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், வாணிய செட்டியார் சமூகத்தின் சார்பில் நடந்தது. முன்னதாக சுவாமி அழைப்பு, விசேஷ பூஜைகளுடன், காந்தி மைதானத்தில் திருக்கல்யாணம் நடந்தது.
* சின்னாளபட்டி ராம அழகர் கோயில் சித்திரை திருவிழாவில், கீழக்கோட்டையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சிகளாக, மே 5ல் சுந்தரராஜ பெருமாள் குடகனாற்றில் இறங்குதல், மே 11ல் பூப்பல்லக்கு ஊர்வலம் நடக்க உள்ளது.