உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்தலக்குண்டு சமயபுரம் முத்துமாரியம்மன் கருப்பணசாமி கோயில் சித்திரை திருவிழா

வத்தலக்குண்டு சமயபுரம் முத்துமாரியம்மன் கருப்பணசாமி கோயில் சித்திரை திருவிழா

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருணாச்சலபுரத்தில் உள்ள சமயபுரம் முத்துமாரியம்மன் கருப்பணசாமி கோயில் சித்திரை திருவிழா நடந்தது. பல்வேறு நிகழ்வுகளுடன் இவ்விழா சிறப்பாக நடந்தேறியது. பொங்கல் வைத்தல் விளையாட்டுப் போட்டிகள் கும்மி கோலாட்டம் ஆகிய நிகழ்வுகள் நடந்தன. தீச்சட்டி எடுத்து மாவிளக்கு பூஜைகள் நடந்தன. பொங்கல் படைத்து கிடா வெட்டப்பட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றப்பட்டது. மூன்றாம் நாளில் மழை வேண்டி பெண்கள் முளைப்பாரி எடுத்து சாமிகள் வேடமணிந்து பக்தர்கள் ஊர்வலம் சென்றனர். நகரின் முக்கிய வீதியில் வலம் வந்து மஞ்சள் ஆற்றில் கரைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !