குன்னூர் தந்தி மாரியம்மன் கோயில் திருவிழா
ADDED :885 days ago
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் திருவிழாவில், சந்திரா காலனி மக்கள் சார்பில் திருத்தேர் ஊர்வலம் நடந்தது. செண்டை மேளம், தாரை தப்பட்டை முழங்க சந்திரா காலனியில் இருந்து, அபிஷேக பொருட்களுடன் தீர்த்த குட ஊர்வலம் நடந்தது. மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலையில் அம்மன் திருத்தேர் பவனி சந்திரா காலனி வரை நடந்தது. இதில், சிவன், அம்மன் வேடமணிந்தவர்களின் நடனம் இடம் பெற்றது. ஏற்பாடுகளை ஊர் மக்கள் செய்தனர்.