மீனம்பூர் தவமணி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :958 days ago
செஞ்சி: மீனம்பூர் தவமணி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
செஞ்சி அடுத்த மீனம்பூர் தவமணி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. இதை முன்னிட்டு பால் குடம் அடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இந்து முன்னணி மாநில பொது செயலாளர் மனோகர் தலைமையில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இதில் இந்து முன்னணி வடக்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன், மாவட்ட பொது செயலாளர் பிரிதிவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை தலைவர் சந்தோஷ்குமார், நிர்வாகிகள் ஜனா, சிம்பு, தீபக், முத்து, சிவனேஷ், ராஜ்கவுதம், ராகுல் மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.