மேலும் செய்திகள்
திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில் நவராத்திரி விழா
872 days ago
பிரம்மாகுமாரிகள் ராஜயோக நிலையத்தில் சிறப்பு தியானம்
872 days ago
தோழர்களிடம் பேசிக்கொண்டிருந்தார் நபிகள் நாயகம். அப்போது அங்கே வந்த ஒருவர் அவரிடம், ‘‘உமது செல்வத்தில் இருந்து ஒரு பகுதியை தாரும்’’ என ஆவேசமாக கேட்டார். அருகில் இருந்தவர்கள், ‘எவ்வளவு அநாகரிகம்’ எனக் கோபப்பட்டனர். அவரோ, ‘‘அமைதியாக இருங்கள். அவரை என்னிடம் விடுங்கள்’’ என்றார். பிறகு அவரை கிடங்கு ஒன்றிற்கு அழைத்துச் சென்றார். அங்கு இருந்த கோதுமையைக் கொடுத்து, ‘‘இது போதுமா’’ எனக்கேட்டதற்கு, ‘‘இன்னும் வேண்டும்’’ என்றார். மீண்டும் அள்ளிக்கொடுத்தவர், ‘‘போதும்தானே’’ எனக்கேட்டார். ‘‘போதுமான அளவு கொடுத்து விட்டீர். இறைவன் உமக்கு நற்கூலி வழங்குவானாக’’ என்றார் அவர். அப்போது அவரிடம், ‘‘சகோதரரே! உம்மைக் குறித்து தவறான எண்ணம் என் அருகில் இருந்தவர்களுக்கு உருவாகியுள்ளது. அதை சரிசெய்துவிட்டு செல்லுங்கள்’’ என்றார் நபிகள் நாயகம். உதவி பெற்றவர் அங்கு சென்று, ‘‘அவர் நல்லவிதமாக நடந்து கொண்டார். எனக்கு தேவையானது கிடைத்தது’’ என சொல்லிவிட்டு சென்றார். பின்னர் அருகில் இருந்தோரிடம் இதைப்பற்றி கூறினார் நபிகள் நாயகம். ‘‘உங்களுக்கும் எனக்கும் இந்த நபருக்குமான எடுத்துக்காட்டு என்ன தெரியுமா? ஒரு மனிதருடைய ஒட்டகம் தொழுவத்தில் இருந்து கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடுகிறது. அதைப் பிடிக்க சிலர் அதற்குப் பின்னே ஓடுகின்றனர். இவர்களைப் பார்த்த மிரட்சியில் அது இன்னும் வேகமாக ஓடுகிறது. அப்போது ஒட்டகத்தின் உரிமையாளர், ‘மக்களே! ஒட்டகத்தை என்னிடம் விட்டுவிடுங்கள். அதை எவ்வாறு வழிக்குக் கொண்டு வர வேண்டும் என தெரியும்’ என்றார். பின்னர் சிறிது புற்களைப் பறித்து ஒட்டகத்திடம் காண்பித்தார். அதுவும் அமைதியானது. அதுபோலவேத்தான் என்னிடம் கேள்வி கேட்டவரிடம் நடந்து கொண்டேன். நீங்கள் அவரை அடித்திருந்தால், உங்கள் மீது அவர் வெறுப்பு கொண்டிருப்பார். ஓர் இறைநம்பிக்கையாளர் கருணை உள்ளம் கொண்டவராகவே இருக்க வேண்டும்’’ என அறிவுறுத்தினார்.
872 days ago
872 days ago